Pages

Subscribe:

Ads 468x60px

Featured Posts

Saturday, November 12, 2011


ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான மாநாட்டில் இலங்கையின் சார்பில் பங்கேற்கும் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடிப்படை குற்றவியல் சட்டஅறிவுகளை கொண்டிருக்கவில்லை என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி அவருக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. 
இன்போது மொஹான் பீரிஸினால் சரியான புள்ளிவிபரங்களையும் சம்பவங்களையும் கூறமுடியவில்லை. 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் உரிய சட்டமுறைகள் இருப்பதாக குறிப்பிட்டார். 
எனினும் அதனை கண்டித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு நடைமுறை நிறைவேற்று அதிகாரம் கொண்டு ஜனாதிபதி முறையின் கீழ் அந்த சட்டங்கள் வலுவிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 
இலங்கை    பாதுகாப்பு அமைச்சின் இணைத்தளத்தில் சில சட்டத்தரணிகளை துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை காப்பாளர்கள் தாக்கப்பட்டமை குறித்து மொஹான் பீரிஸ் பதில் எதனையும் வழங்க மறுத்துவிட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சில சட்டத்தரணிகள் துரோகிகள் என்ற குறிப்பிடப்பட்டமை எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஊடகவியலாளார் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் இலங்கைக்கு எதிரான பிரசாரத்துக்காக வெளிநாடு ஒன்றில் அகதியாக சென்றிருக்கலாம் என்று மொஹான் பீரிஸ் பதிலளித்துள்ளார். அவரால் வலுவான ஆதாரங்களை சமா்ப்பிக்க முடியவில்லை.

சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனம் கட்டாயம் காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரகடனம் சா்வதேச யுத்த நீதிமன்றம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பீரிஸ் பதிலளிக்கவில்லை.
வெலியமுன என்பவரது வீட்டின் மீது கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து கேட்டபோது மொஹான் பீரிஸ் அளித்த பதில்களில் அவருக்கு அடிப்படை சட்டஅறிவு இல்லை என்பதை உணர்த்தியதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை சித்திரவதைகள் தொடா்ல் பூஜ்ஜிய நிலை ஏற்படவேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவதாக அவா் குறிப்பிட்டபோது அதனை சித்திரவதைகள் தொடா்ன ஐக்கிய நாட்டு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரின் பதில்கள் உண்மையை மறைப்பதாக அமைந்துள்ளதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று யாழ். பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த வலைப்பின்னலைச் சேர்ந்த ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
யாழ். நகரில் மாணவர்கள் மத்தியில் ஹெரோயின் பயன்பாடு குறித்த தகவல் கல்விச் சமூகத்தைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
மாவட்டத்தின் ஒரே சொத்தான கல்வியை அடியோடு பாழாக்கி விடக்கூடிய இந்தப் பழக்கத்தைத் தடுக்க உடனடியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று கல்விச் சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
பாடசாலை மாணவன் ஒருவன் போதைப் பொருள் பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் விரைந்து எடுத்த நடவடிக்கையில் பல மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்து, மாணவர்களுக்கு ஹெரோயின், கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்களை விநியோகித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பாடசாலைகளில் கற்கும் சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களே பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
போதைப் பொருளுக்கு அடிமையான மாணவர்களில் ஒருவர் 14 வயதேயானவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் வழங்கிய தகவல்களில் இருந்து, யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்குப் போதைப் பொருள்களை விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்றைப் பொலிஸார் அடையாளப்படுத்தினர்.
நேற்றுக் காலையில் இருந்து மாலை வரை அவர்கள் நடத்திய அதிரடி நடவடிக்கை மூலம் அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மூலம் போதைப் பொருள் விற்கும் கும்பலை மடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த அவர் உத்தரவிட்டார்.
பரிசோதனைகளின் பின்னர் பெற்றோர் அழைக்கப்பட்டு, எச்சரிக்கை செய்யப்பட்டு மாணவர்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். எனினும் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு அவர்களை உளவள ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டார்.
இந்த மாணவர்களில் அனேகமானோர் ஆசிரியர்கள், அதிபர்கள் போன்ற உயர் பதவியில் உள்ளவர்களின் பிள்ளைகள் என்றும் தெரியவந்துள்ளது.
எனவே, மாணவர்களிடம் பரவிவரும் இந்தப் போதைப் பொருள் பாவனையைத் தடுத்து நிறுத்த சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் இணைத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசர, அவசிய தேவையாக உள்ளது என்று யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண மக்களின் சொத்தான கல்வியை அழிப்பதற்காகவே மாணவர்களைப் போதைப் பொருளுக்கு அடிமையாக்குகிறார்கள். இதனைத் தடுப்பதற்கு பொது நிறுவனங்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் முன்வர வேண்டும்'' என்று யாழ். பல்கலைக்கழக பொருளியல்துறைத் தலைவர் வி.பி.சிவநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் விரிவுரையாளர் வி.பி.சிவநாதன் மேலும் தெரிவித்ததாவது:
மாணவர்களிடம் போதைப் பொருள் பாவனை என்பதை சமூகத்தை அழிப்பதற்கான நடவடிக்கையாகவே நோக்க வேண்டும். பாடசாலைச் சமூகத்தைப் பொறுத்த வரையில் அதிலும் யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வித் தரத்தை வீழ்த்துவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் எமது கல்விச் சந்ததி இல்லாமல் போய்விடும் என்றே சொல்லலாம். இதனைத் தடுப்பதற்கு முதலில் பெற்றோர் விழிப்பாக இருக்க வேண்டும். பாடசாலைகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
வடக்கு  கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அதிகாரியும் "ஆறுதல்' தொண்டு நிறுவனப் பணிப்பாளருமான சுந்தரம் டிவகலாலா இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் எமது சமூதாயத்தை இந்தப் போதைப் பொருள் பாவனையில் இருந்து உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து, கிராம மட்டத்திலிருந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணத்தில் முன்னர் இல்லாத இத்தகைய இந்தப் போதைப் பொருள் பாவனை பழக்கங்கள் இப்போது எப்படி வந்தன? ஏன் வந்தன? எங்கிருந்து வருகின்றன? என்பதை ஆராய வேண்டும்.
போதைப் பொருளுக்கு இளம் சமூகம் அடிமையாகிவிட்டால் அதனைப் பாதுகாப்பது கடினம். முழுச் சமூகமும் இது குறித்து உரத்துச் சிந்திக்க வேண்டும்.
இது தொடர்பில் கிராமங்கள் தோறும் சென்று பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாகத் தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சகல பாடசாலைகளிலும் நேரம் ஒதுக்கி, போதைப் பொருள் பாவனையின் கேடுகள் பற்றியும் துஷ்பிரயோகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்றார்.
முன்னாள் சர்வதேச நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்கான் பற்றிய தவறான செய்திகள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வருவதாக அவரது வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் கூறுகையில், இன்றும் இந்தச் செய்தி பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக வெளிவருகிறது. இதை மாற்றுவதற்கு அவரது வழக்கறிஞர்கள் உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும். நீதிபதிகள் விசாரித்து விரைவாகத் தீர்ப்பு வெளிவந்தால் இந்த அவப்பெயர் ஒழியும் என்கின்றனர்.
இந்த வாரம் பிரான்ஸின் பிரபல நாளிதழான லிபரேஷன் ஸ்டிராஸ்கானைப் பற்றிய தகவல்கள் தொலைபேசிக் குறுந்தகவல்கள் மூலம் கசிந்ததாக தெரிவித்துள்ளன. இவர் பேப்ரிஸ் பங்கோவ்ஸகி என்ற தரகருக்கு அனுப்பிய தகவல்களைப் இந்தப் பத்திரிக்கை வெளியிட்டது.
ஸ்டிராஸ்கானின் வழக்கறிஞர்கள் இதுகுறித்து கூறுகையில், இந்தக் குறுந்தகவல்கள் அனைத்தும் விசாரணை தொடர்பான பாலியல் வியாபாரத் தகவல்கள், ஸ்டிராஸ் தொடர்பானவை அல்ல ஸ்டிராஸ்கான் நீதிமன்ற விசாரணையின் போது தன் பக்கத்து நியாயங்களை எடுத்துரைக்க முடியும் என்று பத்திரிகையாளரிடம் தெரிவித்தனர்.
முன்னாள் சர்வதேச நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்கான் பற்றிய தவறான செய்திகள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வருவதாக அவரது வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் கூறுகையில், இன்றும் இந்தச் செய்தி பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக வெளிவருகிறது. இதை மாற்றுவதற்கு அவரது வழக்கறிஞர்கள் உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும். நீதிபதிகள் விசாரித்து விரைவாகத் தீர்ப்பு வெளிவந்தால் இந்த அவப்பெயர் ஒழியும் என்கின்றனர்.
இந்த வாரம் பிரான்ஸின் பிரபல நாளிதழான லிபரேஷன் ஸ்டிராஸ்கானைப் பற்றிய தகவல்கள் தொலைபேசிக் குறுந்தகவல்கள் மூலம் கசிந்ததாக தெரிவித்துள்ளன. இவர் பேப்ரிஸ் பங்கோவ்ஸகி என்ற தரகருக்கு அனுப்பிய தகவல்களைப் இந்தப் பத்திரிக்கை வெளியிட்டது.
ஸ்டிராஸ்கானின் வழக்கறிஞர்கள் இதுகுறித்து கூறுகையில், இந்தக் குறுந்தகவல்கள் அனைத்தும் விசாரணை தொடர்பான பாலியல் வியாபாரத் தகவல்கள், ஸ்டிராஸ் தொடர்பானவை அல்ல ஸ்டிராஸ்கான் நீதிமன்ற விசாரணையின் போது தன் பக்கத்து நியாயங்களை எடுத்துரைக்க முடியும் என்று பத்திரிகையாளரிடம் தெரிவித்தனர்.

cell phones

தினமும் நம் கைபேசிக்கு வரும் குறுஞ்செய்திகளை ஒழுங்குபடுத்தி நாம் படிக்கும் வண்ணம் சரி செய்து கொடுப்பதற்காக ஒரு டூல் புதிதாக வந்துள்ளது.
சில SMS -கள் என்ன சொல்ல வருகிறது என்று புரிவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும், காரணம் என்னவென்றால் அவர்களின் ஆங்கிலப் புலமை நமக்கு புரியாத வண்ணம் இருக்கும், இப்படி நமக்கு வரும் குறுஞ்செய்திகளை சரி செய்து கொடுக்க ஆண்டிராய்டு மென்பொருளில் ஒரு டூல் உள்ளது.
ஆண்டிராய்டு போனில் இத்தளத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி SMS Corrector என்ற டூலை நிறுவலாம்.
நிறுவிய பின் நமக்கு இன்பாக்ஸ்(Inbox) -ல் வரும் குறுஞ்செய்திகளில் இருக்கும் பிழைகள் அல்லது கடினமான வார்த்தைகள் என அனைத்தும் நாம் எளிதாக படிக்கும் வண்ணம் மாற்றப்பட்டு இருக்கும்.
இந்த SMS Corrector டூலில் நமக்கு வந்திருக்கும் குருஞ்செய்தியை மொழி மாற்றம் செய்தும் படிக்கலாம், எழுத்துப்பிழை முதல் சரியாக இல்லாத வார்த்தை வரை அனைத்தையுமே பட்டியலிட்டு சரி செய்கிறது. ஆண்டிராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு SMS Corrector – டூல் கண்டிப்பாக எளிதாக SMS படிக்க உதவும்.

Friday, July 8, 2011

யாழ் நகரில் கால்வாய்களில் கழிவு நீர்த்தேக்கம்

யாழ் நகரின் மத்திய பகுதியில் கழிவு நீர் கால்வாய்களில் கழிவு நீர் தேங்கி உள்ளதால் சுற்றுப்புறங்களில்
துர்நாற்றம் வீசுகின்றது. சனக்கூட்டம் நிறைந்துள்ள பிரதேசம் யாழ்நகரம், இதன் மையப்பகுதியான யாழ் பஸ் நிலையத்தை
அண்மித்த பகுதியில் இவ்வாறான கால்வாய்களில் கழிவு நீர் தேங்கி உள்ளதால்
நுளம்புப்பெருக்கம் ஏற்பட்டு .
தொற்று நோய்கள்  பரவும் அபாயம் அதிகமாகக்  காணப்படுகின்றது.
இவ்வாறான இடங்களை தினமும் துப்புரவு செய்யும் பணியில் யாழ் மாநகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் ஈடு படுத்தப்படுதல் அவசியமாகும்.
அத்துடன் கழிவுநீர் தேங்காத வகையில் வழிந்தோட செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் அவசியமாகும்.

Sample text

Sample text

Sample

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Powered By Blogger